சீன பொருட்களின் வருகை பற்றி தாய்லாந்து கவலை

சீனா - லாவோஸ் ரயில் அமைப்பு நாட்டுக்குள் சீன பொருட்கள் நுழைவதற்கான வாயிலாக அமையலாம் என்று தாய்லாந்து கவலை வெளியிட்டுள்ளது.

சீனா - லாவோஸ் ரயில் அமைப்பு தாய்லாந்தின் விவசாய பொருளாதாரம் மற்றும் சிறிய நடுத்தர வர்த்தகங்களின் போட்டித் தன்மையை பாதிக்கும் என்று தாய்லாந்து வர்த்தக சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நொங் காய் சோதனைச்சாவடி சீன பழங்கள் மற்றும் மரக்கறிகளுக்கான நுழைவாயிலாக மாறும் என்று அந்த சங்கம் அச்சம் வெளியிட்டுள்ளது.

இந்த சோதனைச் சாவடி வர்த்தகத்திற்காக இன்னும் திறக்கப்படவில்லை என்று முன்னர் சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கான தீர்வொன்றை காண்பதற்கு விவசாய மற்றும் கூட்டுத்தாபனங்கள் அமைச்சு தொடர்புடைய சீன நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாக தேசிய மூலோபாயம் மற்றும் பாதுகாப்பு நிபுணரான டொக்டர் சய்யாசித் டன்டயாகுல் தெரிவித்துள்ளார்.

Sun, 12/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை