தென்னாபிரிக்க ஜனாதிபதி ரமபோசாவுக்கு கொரோனா

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி டி கிளார்க்கின் நினைவஞ்சலி நிகழ்ச்சிக்குச் சென்றதைத் தொடர்ந்து, அவருக்கு மிதமான அறிகுறிகள் தென்பட்டதாக தென்னாபிரிக்க ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்தது.

ரமபோசாவுக்கு ஒமிக்ரோன் வைரஸ் தொற்றியுள்ளதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

அவர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாகவும் தற்போது தென்னாபிரிக்க தலைநகர் கேப் டவுனில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அவருக்குப் பதிலாக உப ஜனாதிபதி டேவிட் எம்புஸா ஜனாதிபதி பொறுப்புகளைத் தற்காலிகமாகக் கவனித்துக்கொள்வார்.

மேற்கு ஆபிரிக்க நாடுகளான நைஜீரியா, ஐவரிகோஸ்ட், கானா மற்றும் செனகல் நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்ட ரமபோசா கடந்த புதன் கிழமையே நாடு திரும்பினார். தாம் பயணித்த அனைத்து நாடுகளினதும் பிரதிநிதிகள் மீது கொரோன சோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

உலகெங்கும் வேகமாக பரவிவரும் ஒமிக்ரோன் திரிபு தென்னாபிரிக்காவிலேயே முதல் முறை கண்டுபிடிக்கப்பட்டது.

Tue, 12/14/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை