மத அவமதிப்பு செய்தார் என்பது முற்றிலும் போலியான குற்றச்சாட்டு

சம்பவ விசாரணைகள் உன்னிப்பாக கவனிக்கப்படும்

 

பாகிஸ்தான் – சியல்கொட் நகரில் இலங்கை பிரஜையான பிரியந்த குமார கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார ஒரு மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக தெரிவிக்கப்படுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும் என்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நேற்று (06)  திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், பாகிஸ்தானில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான சம்பவத்தை வன்மையாகக் கண்டிருக்கிறோம். மனிதனால் இவ்வாறு செய்ய முடியுமா என்று சிந்திக்கக் கூடியளவுக்கு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

 

Tue, 12/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை