ஆஸியில் ஒமிக்ரோன் திரிபினால் ஒருவர் பலி

அவுஸ்திரேலியாவில் ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபால் முதல் முறை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

80 வயதைத் தாண்டிய அந்த ஆடவருக்கு, ஏற்கனவே சில உடல்நலக் கோளாறுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. முதியோர் இல்லத்தில் அந்த ஆடவருக்கு வைரஸ் தொற்றியது. அவர் சிட்னி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனாலும், புதிய கட்டுப்பாடுகள் ஏதும் அங்கு அறிவிக்கப்படவில்லை.

ஈராண்டுக்குப் பின் மீண்டும் அவுஸ்திரேலியா அதன் கடுமையான கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகிறது. அப்படிப்பட்ட நேரத்தில், ஒமிக்ரோன் திரிபு, சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தவிடாமல் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் மொத்தம் 6,324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 524 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 55 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Tue, 12/28/2021 - 07:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை