போலி நாணயத் தாள்கள் புழக்கத்தில்; அவதானத்துடன் செயற்பட மத்திய வங்கி அறிவுறுத்து

நாடளாவிய ரீதியில் போலி நாணயத் தாள்கள் பெருமளவு புழக்கத்தில் உள்ளதாகவும் அது தொடர்பில் பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என மத்திய வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான நாயணத்தாள்கள் கிடைக்குமானால் அதிலுள்ள பாதுகாப்பு அடையாளங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் மத்திய வங்கி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அவ்வாறான நாணயத் தாள்கள் காணப்படுமாயின் அதனைக் கொண்டுவந்த நபர், அவரது வெளித்தோற்றம், அவர் வாகனமொன்றில் வந்திருந்தால் அந்த வாகனம் தொடர்பான விபரங்கள், நாணயத்தாளின் பெறுமதி, அதன் இலக்கம் உள்ளிட்ட தகவல்களை பெற்றுக்கொண்டு அருகில் உள்ள கெபாலிஸ் நிலையம் அல்லது குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களத்துக்கு உடனடியாக அறிவிக்குமாறும் மத்திய வங்கி மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அதற்கிணங்க குற்றத்தடுபபு விசாரணை திணைக்களத்தில் போலி நாணயத்தாள்கள் தொடர்பான பிரிவின் 0112422176 அல்லது 0112326670 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

போலி நாணயத்தாள்களில் தம் வசம் வைத்திருத்தல்,அதனைப் புழக்கத்துக்கு விடுதல், நாணயத் தாள்களை அச்சிடுதல் தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறான குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனையும், தண்டமும் இரண்டும் வழங்கப்படுவதுடன் குற்றங்களுக்கேற்ப இரண்டு தண்டனைகளைம் வழங்கக் கூடிய குற்றம் அதுவெனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதார நிலை காரணமாக இவ்வாறான போலி நாணயத்தாள்கள் அச்சிடுதல், புழக்கத்துக்கு விடுதல் உள்ளிட்ட செயற்பாடுகள் பெருமளவில் இடம்பெற்று வருவதாகவும் அது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொலிஸ் மா அதிபர் குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களத்துக்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 12/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை