ஆப்கானிஸ்தானிலிந்து ஹெரோயின் வருகை உலக சந்தையில் பெரிதும் அதிகரிப்பு

தலிபான்கள் காபூலில் ஆட்சி பீடமேறிய பின்னர், ஆப்கானிஸ்தானில் இருந்து ஹெரோயின் வருகை உலக சந்தையில் பெரிதும் அதிகரித்துள்ளது. இது புதியதொரு சவாலாகத் தோற்றம் பெற்றுள்ளதுடன் போதைப்பொருள் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதோடு அமைதிக்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவாகியுள்ளதாக தெற்காசியக் கற்கைகளுக்கான ஐரோப்பிய மன்றத்தின் (ஈ.எப்.எஸ்.ஏ.எஸ்) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, உலகின் மிகப் பெரிய அபின் உற்பத்தியாளராக விளங்கும் ஆப்கானிஸ்தான், அபின் உற்பத்தியில் சுமார் 87 சதவீதத்தைத் தனதாக்கிக் கொண்டுள்ளது. கடந்த இரண்டு தசாப்த காலப்பகுதியில் 9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான அபினை உற்பத்தி செய்ய முயற்சித்த போதிலும் அதன் சட்ட விரோத உற்பத்தியை அமெரிக்கா தடை செய்திருந்தது.

தலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஆட்சிக்கு வந்தவுடன், அதன் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித், 'ஆப்கானிஸ்தான் இனியொரு போதும் அபின் பயிரிடும் நாடாக இராது. இங்குள்ள விவசாயிகளை வலுவூட்டுவதற்கும் அவர்கள் வாழ்வாதாரத்திற்கான வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கும் அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்து கொடுக்கவும் முழு உலகமும் எங்களுக்கு உதவும்போது தான் இது சாத்தியமாகும் என்றும் அவர் கூறி இருந்தார்.

ஆனால் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் குறித்த 500 க்கும் மேற்பட்ட நிபுணர்களை உள்ளடக்கியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான உலகளாவிய கூட்டமைப்பு, சட்ட அமுலாக்கம், கல்வித்துறை, பாதுகாப்பு,

தொழில்நுட்பம், ஊடகம், தனியார் துறை மற்றும் மேம்பாட்டு முகவர் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட அறிக்கையில், 'தலிபான்கள் போதைப்பொருள் கடத்தலை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்துள்ள போதிலும், சர்வதேச சமூகத்தையும் வெளிநாட்டு உதவிகளையும் நாட்டிற்கு கொண்டு வருவதற்கும் பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்குமான மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இதனைக் கையாள்வதாக அவதானிப்பாளர்கள்

கருதுவதாகவும், இது போதைப்பொருளுக்கு எதிரான கொள்கைக்கு உள்ள பங்களிப்பு அல்ல' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான தூதர் ஜோன் கொட்பிரி, 'ஆபிரிக்க உதாரணமொன்றை சுட்டிக்காட்டி,  போதைப்பொருட்கள் விலை உயர்ந்த வர்த்தகமாக இருந்த போதிலும் இறுதியில் அது போதைப்பொருள் பயங்கரவாதமாக மாறுவதற்குள்ள அச்சுறுத்தல்களை விபரித்துள்ளார்.

இந்த ஆபத்தான சவால்களுக்கு மத்தியில் தலிபான்களினால் ஊக்குவிக்கப்படும் ஹெரோய்னின் கடும் அதிகரிப்பைக் கட்டுப்படுத்தவென இப்போதே போதிய நடவடிக்கை எடுப்பது அவசரத் தேவையாக உள்ளது. தவறும்பட்சத்தில் உலகெங்கிலும் பாதிப்புக்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது போய்விடும்' என்றும் அவ்வறிக்கை வலியுறுத்தியுள்ளதாக ஏ.என்.ஐ சுட்டிக்காட்டியுள்ளது.

Sun, 12/05/2021 - 13:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை