சட்டவிரோதமான வழிகளில் பணப்பரிமாற்ற செயல்

ஈடுபடுவோருக்கு அஜித் கப்ரால் எச்சரிக்கை

சட்டவிரோதமான முறையில் பணப் பரிமாற்றம் செய்பவர்களின் வங்கிக் கணக்குகள் உடனடியாக முடக்கப்படுமென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். அனைத்து புலம்பெயர்ந்த இலங்கையர்களும் தங்கள் வருமானத்தை நாட்டுக்கு அனுப்ப சட்ட வழிகளை மட்டுமே பயன்படுத்துமாறும் மத்திய வங்கியின் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

அதிகாரபூர்வமற்ற வழிகள் மூலம் வரும் பணப்பரிமாற்றங்கள் தொடர்பான தகவல்களை அதிகாரிகள் சேகரித்து வருவதாகவும், நடைமுறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அஜித் நிவார்ட் கப்ரால் கடந்த வாரம் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Fri, 12/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை