பாகிஸ்தானின் சீர்திருத்த முயற்சியில் பின்னடைவு

இலங்கையைச் சேர்ந்த தொழிற்சாலை முகாமையாளர் பிரியந்த குமார மதநிந்தனை குற்றம் சுமத்தப்பட்டு கலகக்காரர்களால் கொல்லப்பட்டு அவரது உடலுக்கு தீ மூட்டப்பட்ட சம்பவம் பாகிஸ்தான் சீர்திருத்தம் மற்றும் இஸ்லாமியவாத பாதையில் இருந்து பின்வாங்க முடியாததை காட்டுவதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மதநிந்தனை மற்றும் காட்டுமிராண்டித்தனம் பாகிஸ்தான் அடையாளத்தை எரித்துவிட்டது என்று செர்கியோ ரெஸ்டெல்லி ‘இன்சைட்’ இற்கு எழுதியுள்ளார்.

சியல்கோட்டில் நடந்தது கடந்த காலத்தில் பல தடவைகள் இடம்பெற்றிருப்பதோடு சியல்கோட்டில் இடம்பெற்றதில் ஒரே வித்தியாசம் என்னவென்றால் வெளிநாட்டவர் ஒருவர் இஸ்லாமியவாத கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டது முதல் முறையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் கூட வங்கி முகாமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு பின்னர் மத நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

சில மாணவர்கள் மதநிந்தனை குற்றச்சாட்டு சுமத்தியதால் கல்லூரிய பேராசிரியர் ஒருவர் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Mon, 12/20/2021 - 07:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை