ஜனவரியில் கொரோனா வேகமாக பரவும் அபாயம்

GMOA சங்க அதிகாரிகள் எச்சரிக்கை

பண்டிகைக் காலங்களில் எச்சரிக்கையுடன் செயற்படாவிட்டால் ஜனவரி மாதத்துக்குள் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்கு செல்லும் பார்வையாளர்கள் முகக்கவசங்களை அணிவது மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்றுதல் வேண்டும் எனவும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அச்சங்கத்தின் செயலாளர் கலாநிதி செனல் பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ்,சிங்கள புத்தாண்டு காலத்தில் கவனக்குறைவான நடத்தை காரணமாக ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து பொதுமக்களுக்கு ஏற்கனவே அனுபவம் உள்ளது என அவர் கூறினார்.

பண்டிகைக் காலங்களில் கொரோனா தொற்றினை பொதுமக்கள் அலட்சியமாக எண்ணினால் அது பரவுவதற்கு வழிவகுக்கும் என அவர் குறிப்பிட்டார்.எனவே பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் செனல் பெர்னாண்டோ கேட்டுக்கொண்டார்.

Wed, 12/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை