ஊழியரைக் கடித்த புலி சுட்டுக்கொலை

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கூண்டிற்குள் அத்துமீறி நுழைந்த ஊழியரை கடித்து குதறிய புலி சுட்டுக்கொல்லப்பட்டது.

நேப்பிள்ஸ் உயிரியல் பூங்காவின் கழிவறைகளை தூய்மை செய்ய வந்த ஒப்பந்த ஊழியர் ஒருவர், மனிதர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மலேசியப் புலி ஒன்றுக்கு உணவளிக்க முயன்றுள்ளார்.

அந்த இளைஞரின் கையை இறுக்கமாகக் கவ்விய புலி, அவரை கூண்டிற்குள் இழுத்து போட்டு கடித்து குதறியது. தகவல் அறிந்து அங்கு விரைந்த பொலிஸ் அதிகாரி, புலியின் வாயில் இருந்து இளைஞரின் கையை விடுவிக்க முடியாததால், புலியை துப்பாக்கியால் சுட்டார்.

இதில் 8 வயதான அந்த மலேசியப் புலி பரிதாபமாக உயிரிழந்தது. படுகாயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Fri, 12/31/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை