புலிகளின் தங்கம் தேடிய இடத்தில் அகழ்வுப் பணி

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நேற்று ஆரம்பம்

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்ததாக நம்பப்படும் தங்கத்தை மீட்பதற்காக தனியார் காணி ஒன்றில் அடையாளம் தெரியாதவர்களால் தோண்டப்பட்ட இடத்தில் நீதிமன்ற உத்தரவிற்கமைய நேற்று மீண்டும் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களின் செயலாளர்கள் இருவரே, இந்த பகுதியில் தங்கத்தை முன்கூட்டியே இரகசியமாக தோண்டி எடுக்க முயற்சித்துள்ளனர்.

இதற்காக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வீட்டிற்கே சென்று உதவி கோரிய போதிலும் அதற்கு அவர் இணங்க மறுத்துள்ளார். இதேவேளை, தோண்டி எடுப்பதற்காக நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் 25ஆம் திகதிக்கு முன்னதாக இரகசியமாக தங்கத்தை தோண்டி எடுக்க உதவுமாறும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் கோரியுள்ளனர்.இக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், இப் பகுதிக்கு கடுமையான பொலிஸ், இராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று நீதிமன்ற கட்டளைக்கிணங்க தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் காவல்துறை அதிகாரிகள், தடையவியல் காவல்துறையினர் கிராம அலுவலகர்கள்,படையினர் ஆகியோர் முன்னிலையில் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.இதன்போது பீப்பாய் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

Sat, 12/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை