லாஃப் எரிவாயு விநியோகம் தொடரும்

நிறுவனம் நேற்று அறிவிப்பு

லாஃப் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தொடருமென லாஃப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் சமையல் எரிவாயு விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிய வண்ண எரிவாயு விநியோகஸ்தர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அவ்வாறான உத்தியோகபூர்வ உத்தரவு எதுவும் இதுவரை தமக்கு தெரிவிக்கப்படவில்லையெனவும், இதனால் எரிவாயு விநியோகம் மற்றும் விற்பனை இடைநிறுத்தப்பட மாட்டாது எனவும் லாஃப் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச். வேகபிட்டிய குறிப்பிட்டார். இதேவேளை, (02) முதல் நாடு முழுவதும் எல்.பி எரிவாயு விநியோகத்தை லிட்ரோ எரிவாயு தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

 

Sat, 12/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை