"யுகதனவி" குற்றச்சாட்டு அரசு முற்றாக நிராகரிப்பு

அமைச்சர் ஜோன்ஸ்டன் தெரிவிப்பு

யுகதனவி உடன்படிக்கை மூலம் நாட்டை காட்டிக்கொடுத்துள்ளதாகவும் நாட்டின் வளங்களை விற்பதாகவும் தெரிவித்து அந்த செயற்பாடுகளில் மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டை தாம் முழுமையாக நிராகரிப்பதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேற்படி உடன்படிக்கை தொடர்பில் அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்திற்கிணங்க நாட்டின் மின் கட்டணம் குறைவடையும் என தெரிவித்துள்ள அமைச்சர், தற்போது மின் அலகு ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக செலவிடப்படும் தொகையில் நூற்றுக்கு ஐம்பது வீதத்தை அதன் மூலம் குறைத்துக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மின் கட்டணம் குறைவடைவதில் சில அரசியல்வாதிகள் ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர் என புரியாமலுள்ளது கீழ் மட்ட மக்கள் தொடர்பில் குரலெழுப்பி ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க போன்றவர்கள்கூட இத்தகைய உடன்படிக்கையை எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்பது தெரியவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்)

Tue, 12/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை