ஐ.நா தலைவருக்கு கொவிட் தொற்று!

ஐ.நா. பொதுச் சபையின் தலைவராக மாலைதீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித் (59) பதவி வகித்து வருகிறார். இவருக்கு கொரோனா தொற்று நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

இரண்டு டோஸ் தடுப்பூசியுடன் ‘பூஸ்டர்’ டோஸும் போட்டுக் கொண்டுள்ளேன். ஆனாலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இலேசான அறிகுறிகள் இருப்பதால் வீட்டு தனிமையில் உள்ளேன். அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

 

Sat, 12/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை