நிபந்தனையின் கீழேயே சீனக் கப்பலுக்கு கட்டணம்

அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு

இலங்கைக்கு உயர் தரத்திலான பசளையை மீள வழங்கும் நிபந்தனையின் கீழேயே சீனக் கப்பலுக்கு செலுத்த வேண்டிய தொகை வழங்கப்படுவதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.  சீனக் கப்பலுக்கு 6.7 மில்லியன் டொலர் வழங்கும்முடிவு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது,

நீதிமன்ற செயற்பாட்டுடனே 6.7 மில்லியன் டொலர் செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. சட்ட மாஅதிபரின் வழிகாட்டலின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இலங்கைக்கு உயர் தரத்திலான பசளையை மீள வழங்கும் நிபந்தனையின் கீழேயே சீனக் கப்பலுக்கு வழங்க வேண்டிய தொகை வழங்கப்படுகிறது. இக் கம்பனி 05 மில்லியன் டொலர் வைப்பொன்றை (பிணைமுறி) வைத்துள்ளது. அது மீள வழங்கப்படவில்லை. இலங்கைக்குரிய தரத்திலான பசளை வழங்கப்பட்ட பின்னரே அந்த பிணைமுறி மீள வழங்கப்படும். சட்ட விவகாரம் காரணமாக தான் சீன கப்பலுக்கு கொடுப்பனவு வழங்க நேரிட்டதென்றும் அவர் தெரிவித்தார்.

 

ஷம்ஸ் பாஹிம்

Wed, 12/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை