தீர்வு தொடர்பா பேச வருமாறு கூட்டமைப்பு அரசுக்கு அழைப்பு

அரசாங்கம் இப்போதாவது எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வுகளை நோக்கி பயணிக்க தயாராக வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழர் விவகாரம் இனியும் இது உள்ளக விவகாரம் அல்ல, இது  சர்வதேசத்திற்கு கொண்டுசெலப்பட்டுள்ள விவகாரம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நெடுஞ்சாலைகள் அமைச்சு,போக்குவரத்து அமைச்சு ,தொழில் அமைச்சு, மற்றும் 3 இராஜாங்க அமைச்சுக்கள் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தூதுக் குழு அண்மையில் அமெரிக்கா,கனடா மற்றும் பிரித்தானியாவிற்கான விஜயத்தை மேற்கொண்ட நிலையில் அது குறித்த செய்திகள், ஊகங்கள் விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. எமது உள்ளக விவகாரங்ள் சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளன

ஒஸ்லோ உடன்படிக்கையின் பின்னரும் ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறைமையிலான அதிகார பகிர்வு குறித்து வெளிவிவகார அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போதும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மூலமாக அதிகார பரவலாக்கல் குறித்து பேராசிரியர் திஸ்ஸ விதாரண குழு பரிந்துரைத்துள்ளது.

மத்தியின் அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டும், தலையீடுகள் இல்லாத வகையில் அவை அமைய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை இந்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

நல்லிணக்கத்தை உருவாக்கும் தீர்வு இதுவென இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் தொடர்ச்சியாக வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த சர்வதேச தரப்பிற்கும் ஒரு வாக்குறுதியை வழங்கிவிட்டு இன்று அதில் இருந்து மாறுபட்டு, ஒரு நாடு ஒரு சட்டம் என்ற சுலோகத்துடன் இயங்க முயற்சிக்கின்றது. ஒரே நாடு, ஒரே சட்டம் யதார்த்தம் என்றால் மத்தியின் எந்தவொரு அதிகாரமும் மாகாணங்களுக்கு வழங்கப்படாது.

அவ்வாறான நிலையில் இந்த கொள்கையில் மாகாணங்கள் எவ்வாறு அதிகார பரவலுடன் செயற்பட முடியும். தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களின் மக்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்றுள்ள கட்சி என்ற ரீதியில் எமது மக்களின் நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்திடம் கொண்டு சேர்த்துள்ளோம். இந்த நெருக்கடிக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து எமக்கு உதவ வேண்டும் . என்றார்.

 

(லோரன்ஸ் செல்வநாயகம்,

ஷம்ஸ் பாஹிம்)

Mon, 12/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை