ஒமிக்ரோன் - திரிபு குறித்து உலக நாடுகள் அக்கறையின்மை

77 நாடுகளுக்கு பரவல் என WHO கவலை

கொரோனா வைரஸ் பிறழ்வின் ஒமிக்ரோன் திரிபு தொடர்பாக உலக நாடுகள் முக்கியத்துவமளிக்காமை தொடர்பில் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இதுவரையிலும் அடையாளம் காணப்பட்ட கொரோனா வகைகளுடன் ஒப்பிடும் போது ஒமிக்ரோன் திரிபு முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் உலகம் முழுவதும் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன், ஒமிக்ரோன் திரிபு பல நாடுகளில் பரவி வருகிறது, ஆனால் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. பல நாடுகளில் ஒமிக்ரோன் திரிபின் பரவலைக் குறைத்து மதிப்பிடுவது தொடர்பில் தான் கவலையடைவதாக உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரோன் திரிபின் பரவலை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இல்லையென்றால் நோயாளிகளின் எண்ணிக்கை எதிர்பாராத விதமாக உயர்வடைந்து, சுகாதாரத் துறை வீழ்ச்சியடையக்கூடும் என்று அவர் உலக நாடுகளை எச்சரித்துள்ளார்.

இதேவேளை, தற்போது 77 நாடுகளில் ஒமிக்ரோன் திரிபு பரவியுள்ளது. ஐரோப்பா இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனிலும் ஒமிக்ரோன் திரிபு வேகமாக பரவி வருகிறன்றதுடன், ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான முதலாவது மரணம் அண்மையில் பிரிட்டனில் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

 

Fri, 12/17/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை