பொருட்கள் கொள்வனவிற்கு செல்வதை மட்டுப்படுத்துங்கள்

சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் எதிர்வரும் பண்டிகைக்காலங்களில் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக செல்வதை மட்டுப்படுத்துமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி அனைவரும் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் ஒரே பொருளை பலர் தொடும் போது கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து நிலை அதிகரிப்பதாகவும் சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் நாயகம் மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வைரஸ் உடலில் தொற்றியுள்ள நபரொருவர் பொருளொன்றை தொடும் போது குறைந்த பட்சம் இரண்டு  நிமிடங்களில் அது மற்றொருவருக்கு பரவும்ஆபத்துள்ளது. அதனைக் கவத்தில் கொண்டு வர்த்தக நிலையங்களில் பொருட்களைக் காட்சிப்படுத்தும் போது கொடுக்கல் வாங்கல் செய்யும் போதும் முடிந்தளவு சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது அவசியமாகும். அத்துடன் பண்டிகைக் காலத்துக்காக பொருட்களை வாங்கச் செல்வொர் சனக் கூட்டம் உள்ள இடங்களைத் தவிர்க்குமாறும் மிக அவசியமானதைப் பெற்றுக்கொள்வதற்காக மட்டும் வர்த்தக நிலையங்களுக்கு செல்லுமாறும் அவர் தெரிவித்துள்ளார். (ஸ)

(லோரன்ஸ் செல்வநாயகம்)

Thu, 12/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை