பிச்சை எடுக்கும் ஒருவருக்கு இரண்டு சொந்த வீடுகள்!

கைதான பெண்ணை விசாரித்த பொலிஸார் அதிர்ச்சியில்

தொழிலதிபர் ஒருவரின் ஏ.டி.எம். அட்டையைப் பயன்படுத்தி சுமார் 200,000 ரூபாவை மோசடி செய்த பிச்சைக்காரப் பெண் ஒருவரை மொரட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எகொட உயன பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் தனது ஏ.டி.எம். அட்டை தவறிவிட்டதாகவும், அதில் இருந்து சுமார் 130,000 ரூபாவை ஒருவர் மோசடி செய்துள்ளதாகவும் கிடைத்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் வடக்கு களுத்துறை, விலேகொட பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்தனர். மொரட்டுவ பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு அருகில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த இவர் ஏ டி எம் அட்டை தரையில் விழுந்து கிடந்த நிலையில் எடுக்கப்பட்டதாக தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சுமார் 135,000 ரூபா பெறுமதியான சலவை இயந்திரம், அரிசி குக்கர், ஆயத்த ஆடைகள், மதுபானம் மற்றும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உணவு, பானங்கள் வாங்குவதற்காக அவரது கணவர் வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை பொலிஸாரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

பிச்சை எடுத்தாலும், சந்தேக நபருக்கு 20,000 ரூபா வாடகைக்கு கொடுக்கப்பட்ட இரண்டு வீடுகளின் உரிமையாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Mon, 12/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை