சாரதி அனுமதிப்பத்திர விநியோகத்தில் மாற்றம்

சாரதி பயிற்சி முடித்த அன்றே வாகன சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கையை தற்காலிகமாக இடை நிறுத்த மோட்டார் போக்குவரத்து  திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரே நாளில் சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் பணியில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் அலுவலகத்தில் இடம்பெற்ற இவ்வாறான முறைகேடுகள் தொடர்பில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவினால் பல முறை ஆராய்ந்ததை அடுத்து இந்த சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று, நடைமுறை பரீட்சையில் தேர்ச்சி குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுக்கு 500 ரூபா செலுத்தி சாரதி அனுமதி பத்திரத்தை பெற வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், நடைமுறைத் பரீட்சையில் தேர்ச்சி பெறும் நாளில் சாரதி அனுமதி பத்திரம் பெறாவிட்டாலும், தற்காலிக உரிமம் வழங்கப்பட்டு, அதைப் பயன்படுத்தி வாகனம் ஓட்ட அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Sat, 12/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை