அமைச்சரவைக் கூட்டத்தில் இரண்டு முக்கிய புள்ளிகள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்திற்கு நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுனரும் அழைக்கப்பட்டுள்ளனர்.  வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நடைபெறும் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இது என்பதால் இன்றைய கூட்டத்தில் முக்கிய விடயங்கள் பல தொடர்பில் ஆராயப்பட உள்ளன.

வெளிநாட்டு கையிருப்பு மற்றும் நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி தொடர்பில் இம்முறை அமைச்சரவையில் முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கும் அமைச்சரவையில் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடு முகம் கொடுத்துள்ள வெளிநாட்டு செலாவணி நெருக்கடி தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட உள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் இந்த அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.

வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு பின்னர் நடைபெறும் முதலாவது அமைச்சரவை கூட்டம் இது என்பதால் இங்கு நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு உள்ளிட்ட விடயங்களில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

அதேவேளை யுக தனவி மின் உற்பத்தி நிலையத்தின் ஒப்பந்தம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது வெளிநாட்டு கையிருப்பு 1.5 பில்லியன் அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ள நிலையில் அது தொடர்பில் நிதியமைச்சு உரிய கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 12/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை