ஒரு இலட்சம் காணி உறுதி பத்திரங்கள் மக்களுக்கு

விரைவில் வழங்க அரசு நடவடிக்கை

ஒரு இலட்சம் காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் இந்த வருட இறுதிக்குள் 75 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்களை வழங்க முடியுமெனவும் காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார். காணி உறுதிப்பத்திரமற்ற சகல காணிகளுக்கும் நடமாடும் சேவைகளூடாக ஸ்வர்ணபூமி மற்றும் ஜயபூமி உள்ளிட்ட காணி உறுதிப் பத்திரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

நேற்றுமுன்தினம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.1972 ஆம் ஆண்டு காணி சீர்திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்ததில் இருந்தே சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பாளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் காணி உறுதிப் பத்திரம் வழங்கப்படும் என அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன உறுதியளித்துள்ளார்.

இதேவேளை கடந்த காலத்தில் 200 காணி உறுதிப் பத்திரங்கள் காணாமல் போயுள்ளன. ஒரு ஏக்கர் காணி ரூபாய் 500க்கு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த விடயம் தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்,ஷம்ஸ் பாஹிம்

Sat, 12/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை