அடுத்த தலைமுறையினருக்கு நியூசிலாந்தில் சிகரெட் தடை

நியூசிலாந்து புகையிலையை முழுமையாக ஒழிக்கும் வகையில் அடுத்த தலைமுறையினருக்கு புகையிலை விற்பதை முழுமையாக தடை செய்யவுள்ளது.

இதன்படி 2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்கள் தமது வாழ்நாளில் சிகரெட் அல்லது புகையிலை உற்பத்திகளை வாங்க முடியாத வகையில் புதிய தடை கொண்டுவரப்படவுள்ளது. இந்த சட்டம் அடுத்த ஆண்டு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்ப்படுகிறது.

“இளைஞர்கள் புகைப்பழக்கத்தை ஆரம்பிக்காதிருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டி உள்ளது” என்று சுகாதார அமைச்சர் டொக்டர் அயேஷா வெரல் தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டு நாட்டின் புகைப்பிடிப்போர் எண்ணிக்கையை 5 வீதமாக குறைக்கும் தேசிய இலக்கை நியூசிலாந்து கொண்டிருப்பதோடு, இதன்மூலம் அதனை முழுமையாக இல்லாமல் செய்வதற்கு அது திட்டதிட்டுள்ளது.

தற்போது அந்த நாட்டில் 13 வீதமான பெரியவர்கள் புகைப்பிடிப்பதோடு அது ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இருந்த 18 வீதத்தில் இருந்து வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

புதிய சட்டம் நடப்பிற்கு வந்தால் பூட்டானுக்குப் பின்னர் சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கும் இரண்டாவது நாடாக நியூசிலாந்து இருக்கும்.

Fri, 12/10/2021 - 07:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை