தடுப்பூசி செலுத்திய அட்டை அவசியம்

 புதிய வழிகாட்டலில் அறிவுறுத்தல்

கொவிட்-19 காரணமாக புனித யாத்திரை காலங்களில் சிவனொலி பாதமலைக்கு செல்லும் பக்தர்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, சிவனொலி பாதமலைக்கு செல்லும் பக்தர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான தடுப்பூசி அட்டை அல்லது அதன் நகலை உடன் வைத்திருக்க வேண்டும். இதனிடையே சிவனொலி பாதமலை யாத்திரை காலத்தில் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலனி லொக்குபோதகம   மாவட்ட செயலாளரால் வெளியிடப்பட்ட விதிமுறைகளில் யாத்திரீகர்கள் தற்காலிக தங்குமிடங்களை ஏற்பாடு செய்யவோ அல்லது பராமரிக்கவோ கூடாதென்று தெரிவித்துள்ளது.அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் அனுமதியின்றி வர்த்தக நிலையங்களை நிர்மாணிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யாசகம் எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி என்பனவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான யாத்திரை டிசம்பர் 18 ஆம் திகதி தொடங்கி அடுத்த ஆண்டு மே 16 ஆம் திகதியுடன் நிறைவடையும்.

Thu, 12/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை