வடக்கில் இந்தியாவை கால் பதிக்க கோருகிறார் மனோ

வடக்கிலுள்ள தீவுகளில் முன்னெடுக்கவிருந்த மின் உற்பத்தி திட்டங்களை சீன நிறுவனம் இடைநிறுத்தியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது.

அந்த தீவுகளில் சுத்தமான சூரிய சக்தி மின் நிலையங்களை அமைக்க இந்தியா உடனடியாக முன்வர வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.இந் நிலையில், இந்த விடயம் குறித்து தனது முக நூலில் பதிவிட்டுள்ள மனோ கணேசன்,

“வட பகுதி தீவுகளில் மறு விளைவு இல்லாத சுத்தமான சூரிய சக்தி மின் நிலையங்களை அமைக்க இருந்த சீன திட்டம், இந்தியாவின் பாதுகாப்பு ஆட்சேபனை காரணமாக இடை நிறுத்தப்பட்டு விட்டது.

ஆனால், அதற்கு பதிலாக அதே மின் உற்பத்தி கட்டமைப்பை மாலைத்தீவின் 12 ஆளில்லா தீவுகளில் முன்னெடுக்க அந்நாட்டு அரசுடன் சீனா உடன்பாடும் கண்டுள்ளது.

அதேபோல் அதற்கு பதிலாக அதே நம்ம வடக்கு தீவுகளில் மறு விளைவு இல்லாத சுத்தமான சூரிய சக்தி மின் நிலையங்களை அமைக்க இந்தியா உடனடியாக முன் வர வேண்டும்.

ஏனெனில் இந்த இந்தியா-இலங்கை-சீனா கயிறு இழுப்புகளுக்கு மத்தியில் நம் நாட்டுக்கு, சுத்தமான மின்சாரம் தேவை” என தெரிவித்துள்ளார்.

 

Sat, 12/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை