பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி

பாகிஸ்தான் பொருளாதாரத்தை புத்துயிர்பெறச் செய்யும் முயற்சிகளில் அந்நாட்டு அரசு ஈடுபட்டபோதும் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாதுள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் தற்போதைய பொருளாதார குறியீடுகள் மோசமாக இருக்கும் நிலையில் அதனை புத்துயுர்பெறச் செய்யும் முயற்சிகள் இரட்டிப்பு சவால் மிக்கதாக மாறக்கூடும் என இன்சைட் ஓவர் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

'அதிக ஏற்றுமதிகளுக்கு ஆதரவளிக்காத, ஆனால், அதிக உள்நாட்டு நுகர்வுக்கு மத்தியில் வளர்ச்சியை முன்னிலைப்படுத்திய பாகிஸ்தானின் பொருளாதார கொள்கையில் சர்வதேச நாணய நிதியம் ஆழ்ந்த செல்வாக்கை கொண்டுள்ளது' என்று பெடரிகோ கிலானி குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் குறைவான செயல்திறன் கொண்ட பொருளாதாரம் காரணமாக ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக குறிப்பிடத்தக்க வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கவர முடியாதுள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் அரசு வெளிநாட்டு உட்பாய்ச்சல்களை தீவிரமாக எதிர்பார்ப்பதோடு நிதி உதவிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

Fri, 12/03/2021 - 12:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை