மரக்கறி விலைகள் சிலவற்றின் விலை திடீரென அதிகரிப்பு

சந்தையில் மரக்கறி விலைகள் சிறிதளவு குறைந்துள்ள போதிலும் கறி மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலைகள் உயர்வாகவே காணப்படுவதாக விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப விவசாய இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. பொருளாதார நிலையங்களில் (09) ஒரு கிலோ கறிமிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றின் மொத்த விலை 780 ரூபாவாகவும், சில்லறை விலை 800 ரூபாவாகவும் இருந்தது. ஏனைய காய்கறிகளில் போஞ்சி மொத்த விலை அனைத்து பொருளாதார மையங்களிலும் 400 ரூபாவுக்கு அதிகமாகவே காணப்பட்டது.

அத்துடன், கரட் 380 ரூபா முதல் 400 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Sat, 12/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை