கிரேக்கத்தில் தடுப்பூசி பெறாவிட்டால் அபராதம்

கிரேக்கத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோர் கொவிட்–19 தடுப்பூசி பெறுவது கட்டாயமாக்கப்படவுள்ளது. அவ்வாறு தடுப்பூசி பெற மறுப்போருக்கு ஜனவரி நடுப்பகுதியில் இருந்து மாதத்திற்கு 113 டொலர் அபராதம் விதிக்கப்படும் என்று பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த பணம் கிரேக்க சுகாதார கட்டமைப்புக்கு வழங்கப்படவுள்ளது. அந்நாட்டில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் அதிகரித்து சுகாதார கட்டமைப்பு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிரேக்கத்தில் மக்கள் தொகையில் 63 வீதமான 11 மில்லியன் மக்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றபோதும், 60 வயதுக்கு மேற்பட்ட 520,000க்கும் அதிகமானவர்கள் இன்னும் தடுப்பூசி பெறவில்லை என்று தரவுகள் காட்டுகின்றன.

“60 வயதுக்கு மேற்பட்ட கிரேக்கர்கள் முதல் ஊசியை பெறுவதற்கான முன்பதிவை ஜனவரி 16க்கு முன் மேற்கொள்ள வேண்டும்” என்று பிரதமர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டி இருந்தபோதும் இதற்கு எம்.பிக்கள் ஆதரவளிப்பார்கள் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

Thu, 12/02/2021 - 15:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை