சப்புகஸ்கந்த நிலைய செயற்பாடுகள் நாளை முதல்

மின்சக்தி அமைச்சர் உதய கம்மன்பில

 

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் நாளைய தினம் திறக்கப்படவுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மசகு எண்ணெய்யை கொள்வனவு செய்வதை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்த நிலையில் மேற்படி சப்புகஸ்கந்த எண்ணை சுத்திகரிப்பு நிலையம் கடந்த நவம்பர் முதல் வாரத்தில் மூடப்பட்டது.

தொடர்ச்சியாக 50 தினங்களுக்கு மேற்படி சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் அந்த தீர்மானம் மாற்றப்பட்டுஅதற்கிணங்க 22 தினங்களுக்கு பிறகு நாளைய தினம் மேற்படி சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.அதேவேளை, எரிபொருளை தட்டுப்பாடின்றி விற்பனை செய்யும் வகையில் மேலும் ஒரு தொகை எரிபொருள் நாட்டுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ள நிலையில் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் செயற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதையடுத்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அதனை மீண்டும் நாளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 12/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை