முஸ்லிம் லீக்-என் கட்சிக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டு

பாகிஸ்தான் முஸ்லிம் லீக்–என் கட்சியின் செயற்பாட்டாளர்கள் வாக்குகளை விலை கொடுத்து வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பாகிஸ்தான் தெஹ்ரீக்- இ- இன்சாப் கட்சி தேர்தல்கள் ஆணையகத்தைக் கோரியுள்ளது.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக்–என் கட்சியின் பணியாளர்கள் வாக்காளர்களிடமிருந்து வாக்குகளை இலஞ்சம் கொடுத்து வாங்குவதாகப் பிரதிபலிக்கும் வீடியோக்கள், சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ளதை அடுத்து இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமா ரி.வி அறிக்கையின்படி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸின் கட்சி அலுவலகம் போன்று வீடியோ காணொளி காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இக்காணொளியை தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் பஞ்சாப் தலைவர் எஜாஸ் செளத்ரி பகிர்ந்துள்ளதோடு, “இதன் காரணத்தினால் தான் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்–என் கட்சியினர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு ஆட்சேபனை தெரிவிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பாகிஸ்தான் முஸ்லிம் லீக்–என் கட்சியினர், இது போலியான வீடியோ நாடகம். இந்நாடகத்தின் நடிகர்கள் முகக்கவசம் அணிந்துள்ளனர் என்றுள்ளனர்.

Mon, 12/13/2021 - 07:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை