பொருளாதாரத்திலிருந்து மீள இந்தியா,சீனாவின் உதவி தேவை

ஐ.ம.சக்தியின் எம்.பி- எரான் விக்கிரமரத்ன

இந்தியா அல்லது சீனா எமக்கு ஏதேனும் உதவிகளை செய்தாலே தவிர வேறு எந்தவொரு வழியிலும் எம்மால் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள முடியாதென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியில் நாடு பாரிய நெருக்கடியை சந்தித்துக்கொண்டுள்ள நிலையில் புதிய வேலைத்திட்டமொன்றை உருவாக்கி அதன் மூலமாக சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கும் பொறிமுறை என்னவென்பது அரசாங்கத்திற்கு தெரியவில்லை. இவ்வாறான நிலையில் சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றாலும் எம்மால் சாதகமான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ள முடியாது. இப்போது மிகக் குறைவான வெளிநாட்டு கையிருப்பே எம்முடம் உள்ளது. 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற மிகக்குறுகிய தொகையே எமது கையிருப்பில் வைத்துக்கொண்டு பொருளாதாரத்தை இயக்க முடியாது.

அடுத்த ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி 500 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்த வேண்டியுள்ளதுடன், அடுத்த கட்டங்களில் அதிகளவான கடன்களை செலுத்த வேண்டியுள்ளது.

ஆகவே இப்போது உள்ள நிலைமைகளை அவதானிக்கும்போது இந்தியா அல்லது சீனா எமக்கு ஏதேனும் உதவிகளை செய்தாலே தவிர வேறு எந்தவொரு வழியிலும் எம்மால் மீள முடியாது என்றும் அவர் கூறினார்.

 

Wed, 12/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை