சமையல் எரிவாயு சிலிண்டர்களை வீடுகளில் சோதிக்க வேண்டாம்

லிட்ரோ Gas நிறுவனம் மக்களிடம் கோரிக்கை

சமையல் எரிவாயு சிலிண்டர்களில் சோப் நுரை மற்றும் பிற பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

சோப் நுரை மற்றும் ஏனைய பொருட்களை பயன்படுத்தி எரிவாயு சிலிண்டரை தனிப்பட்ட முறையில் பரிசோதிப்பது ஆபத்தான நிலையெனவும், கடையிலிருந்து வீட்டுக்கு எரிவாயு சிலிண்டரை கொண்டு வரும்போது சீல் வைக்கப்பட்டிருக்க வேண்டுமென நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளரான ஜனக பத்திரத்ன தெரிவித்தார்.

ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். சீல் அகற்றப்பட்டால், ஒரு ரெகுலேட்டர் அல்லது பாதுகாப்பு மூடி இணைக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். வால்வை திறந்து சிலிண்டரை சோதனை செய்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பு மூடியை சரிசெய்து சிலிண்டரை வெளியில் வைத்த பின்னர் எரிவாயு சிலிண்டர் தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 1311 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புக்கொள்ளுமாறும் பொது மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

 

Fri, 12/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை