அபிவிருத்தி தொடர்பில் இந்தியாவுடன் ஒப்பந்தம்

திருகோணமலை எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பாக ஒருமாத காலத்தில் இந்தியாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

திருகோணமலை எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் 'ஹிந்து' பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்துள்ள அவர்,திருகோணமலை எண்ணெய் குதங்கள் அபிவிருத்தி ஒப்பந்தம் தொடர்பில் 16 மாதங்களாக கருத்துப் பரிமாற்றம் செய்து வருகிறோம். இப்போது திருகோணமலை திட்டத்தின் நிலைமைகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

இன்னும் ஒரு மாதத்தில் இந்தியாவுடன் தொடர்புடைய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம் என்று நம்புகிறோம் என கூறினார்.

Tue, 12/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை