சீன ஊடுருவல்: தாய்வான் பாதுகாப்பு அமைச்சர் பதில்

சீனாவின் பாதுகாப்பு படையினர் தம் இராணுவ செயற்பாடுகளை தாய்வான் ஆயுதப் படைகளுக்கு அருகாமையில் மீண்டும் மீண்டும் முன்னெடுப்பதன் ஊடாகத் தம் ஆயுதப்படைகளை களைய முயற்சிக்கிறது. அதற்கு பதிலளிக்கும் திறன் தாய்வானிடம் உள்ளது என்று தாய்வான் பாதுகாப்பு அமைச்சர் சியூ குவா தெரிவித்துள்ளார்.

சீன விமானப்படையினர் புதுப்பிக்கப்பட்ட கூர்முனை விமானங்களுடன் மேற்கொண்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், சீன விமானப்படை விமானங்கள் 27 தாய்வானின் வான் பாதுகாப்பு அடையாளப் பிராந்தியத்திற்குள் மீண்டும் பிரவேசித்த போதிலும் அவற்றை எமது போர் விமானங்கள் துரத்தியடித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தாய்வான் வான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் அத்துமீறிப் பிரவேசித்தமை தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிவித்த பின்னர் ஊடகங்களுக்கு அவர் இதனை தெரிவித்தார். ​இவ்விதமான பலத்தை நீங்கள் கொண்டிருந்தாலும் அதற்கு பதிலளிக்கக்கூடிய சக்தியை எமது தேசிய சக்திகள் வெளிபடுத்தியுள்ளன. தாய்வானும் அதன் வான் பாதுகாப்பு அடையாளப் பிராந்தியமும் ஜனநாயக ரீதியில் நிர்வகிக்கப்படுகின்றன.

Mon, 12/06/2021 - 11:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை