வெளிநாட்டவரை திருமணம் செய்ய பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம்!

வெளிநாட்டவர்களை திருமணம் செய்ய எதிர்ப்பார்க்கும் எந்தவொரு இலங்கையரும் அத்திருமணத்தை பதிவு செய்ய பாதுகாப்பு அமைச்சின் ‘பாதுகாப்பு தடை நீக்கல் சான்றிதழ்’ பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இந்நடைமுறை அமுலுக்கு வரும் என சுற்றறிக்கை ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக, பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய, இந்த ‘ பாதுகாப்பு தடை நீக்கல் சான்றிதழ்’ முறைமை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக, பதிவாளர் நாயகம் டப்ளியூ.எம்.எம்.பி. வீரசேகர தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 12/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை