நேரடியாக கடவுசீட்டை பயன்படுத்தி ஒன்லைன் முன் பதிவு இன்றி ஐயப்பன் யாத்திரை!

நேரடியாக கடவுசீட்டை பயன்படுத்தி ஒன்லைன் முன் பதிவு இன்றி ஐயப்பன் யாத்திரை!-Sabarimala Temple Visa-Senthil Thondaman

- சபரிமலை கோவில் தேவஸ்தானத்திற்கு செந்தில் தொண்டமான் நன்றி தெரிவிப்பு

ஒன்லைன் மூலம் முன் பதிவின்றி நேரடியாக கடவுசீட்டை பயன்படுத்தி இலங்கையர்களுக்கு ஐயப்பன் யாத்திரை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தை வழங்கியமைக்காக சபரிமலை ஐயப்ப கோவில் தேவஸ்தானத்திற்கு நன்றி தெரிவிப்பதாக> இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப தலைவரும் பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஐயப்ப பக்தர்களுக்கு ஒன்லைன் மூலம் முன் பதிவினை மேற்கொண்டு யாத்திரை செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.இந்நிலையில் குழுவாக ஐயப்பன் யாத்திரையை மேற்கொள்ளும் போது குழுவின் அங்கத்தவர்கள் அனைவருக்கும் முழுமையாக பதிவினை மேற்கொள்ள முடியாத சூழ்நிலையினால் ஐயப்ப தரிசனத்தை மேற்கொள்ள சிரமம் ஏற்பட்டதோடு,சிலர் நிர்க்கதிக்குள்ளாகியிருந்தனர். தொடர்சியான கோரிக்கையை ஏற்று ஐயப்ப கோவில் தேவஸ்தானத்தினால் வெளிநாட்டவர்களுக்கு கடவு சீட்டினூடாக ஐயப்பன் யாத்திரையை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் ஒன்லைன் முன் பதிவின்றி கடவு சீட்டினூடாக பயணத்தை மேற்கொள்ள ஐயப்ப கோவில் தேவஸ்தானம் சந்தர்ப்பம் வழங்கியுள்ளமைக்காகவும் அதற்கு உதவி வழங்கிய சபரிமலை மேல் சாந்தி நம்போதரிகள் மற்றும் கோவில் தேவஸ்தான அதிகாரிகளுக்கும் செந்தில் தொண்டமான் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

Sun, 12/12/2021 - 18:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை