சூக்கியின் தண்டனை பாதியாக குறைப்பு

மியன்மாரில் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூக்கியிற்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுச் சிறைத்தண்டனை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மியன்மாரின் அதிகாரபூர்வத் தொலைகாட்சி நிறுவனம் அதனை அறிவித்தது.

சூக்கியையும் முன்னாள் ஜனாதிபதி வின் மிண்ட்டையும் மன்னித்து தண்டனைக் காலத்தைக் குறைத்ததாக மியன்மார் இராணுவத் தலைவர் மின் ஆங் லைன் தெரிவித்தார்.

சூக்கியிற்கும் வின் மிண்ட்டுக்கும் இராணுவத்திற்கு எதிராகக் கருத்து வேறுபாட்டைத் தூண்டிவிட்டதற்காகவும் கொவிட்–19 விதிமுறைகளை மீறியதற்காகவும் தண்டனை விதிக்கப்பட்டது.

Wed, 12/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை