பிரண்டிக்ஸ் ஏழாவது தடவையாகவும் ஆண்டின் சிறந்த ஏற்றுமதியாளராக தெரிவு

ஜனாதிபதி தலைமையில் விருது வழங்கும் நிகழ்வு

இலங்கையின் முன்னணி ஆடை உற்பத்தியாளரான பிரண்டிக்ஸ், ஆண்டின் சிறந்த ஏற்றுமதியாளராக 7ஆவது தடவையாகவும் 2019/20 மற்றும் 2020/21 காலப் பகுதிகளுக்கான 24ஆவது ஜனாதிபதி விருதுகள் வழங்கும் நிகழ்வில் தெரிவு செய்யப்பட்டிருந்தது. 2019/20 காலப் பகுதிக்காக இந்த விருதை பிரண்டிக்ஸ் சுவீகரித்திருந்தது. ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் இடம்பெற்றது. நிறுவனத்தின் 60000 க்கும் அதிகமான ஊழியர்களின் பங்களிப்பினூடாக இந்தக் காலப் பகுதியில் சகல பிரிவுகளிலும் உயர் ஏற்றுமதியாளராக நிறுவனம் தேசிய பொருளாதாரத்துக்கு பங்களிப்புச் செய்திருந்தது.

2019/20 காலப் பகுதிக்கான பிரதான விருதுக்கு மேலதிகமாக, பிரண்டிக்ஸ் சுவீகரித்த ஏனைய விருதுகளில் ‘Contributor from the Regions to the Export Supply Chain’, ‘Best Performing Exporter in Emerging Markets’ எனும் முக்கிய விருதுகள் மற்றும் ‘Best Exporter Award – Apparel – Large Category’ எனும் பிரிவு விருதும் அடங்கியிருந்தன.

2020/21 காலப்பகுதியில், ‘Contributor from the Regions to the Export Supply Chain’ எனும் முக்கிய விருதை பிரண்டிக்ஸ் கைப்பற்றிக் கொண்டது. மேலும், பிரண்டிக்ஸின் கூட்டு முயற்சி பங்குதாரரான InQube Global நிறுவனம் முதல் முறையாக 2019/20 ஆண்டுக்கான வளர்ந்து வரும் ஏற்றுமதியாளராக ‘Emerging Exporter of the Year’ எனும் முக்கிய விருதை சுவீகரித்தது.

பிரண்டிக்ஸ் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்ரப் ஒமார் கருத்துத் தெரிவிக்கையில், “பிரண்டிக்ஸ் நிறுவன விழுமியங்களில் மதிப்பு, ஒன்றிணைவு, குழுநிலை செயற்பாடு மற்றும் சிறப்பு போன்ற பெறுமதிகள் உள்ளடங்கியுள்ளன.

இவை எமது 60,000 ஊழியர்கள் அடங்கிய அணியை உலகப் புகழ் பெற்ற வர்த்தக நாமங்களுக்கான தீர்வுகளை நாளாந்தம் தயாரிப்பதற்கு ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. இன்று ஆடைஉற்பத்தித் துறையின் முன்னோடியாக பிரண்டிக்ஸ் திகழ்வதற்கு வழிகோலியிருந்த பல முயற்சியாளர்களுக்கும் புத்தாக்கமான சிந்தனையாளர்களுக்கும் எமது வெற்றியை நாம் சமர்ப்பிக்கின்றோம். தேசிய பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்கி, ஆயிரக் கணக்கானவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தி, நிலைபேறான அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வதற்கு பங்களிப்பு வழங்க முடிந்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்” என்றார்.

ஏற்றுமதித் துறைக்கும், நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் ஏற்றுமதி நிறுவனங்கள் ஆற்றும் பங்களிப்பை கௌரவித்து ஜனாதிபதியினால் வழங்கப்படும் மிகவும் பெருமைக்குரிய விருதாக ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் அமைந்துள்ளன.

2019/20 மற்றும் 2020/21 காலப்பகுதிகளுக்கான விருதுகள் இரு பிரதான பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டிருந்ததுடன், 12 ஒட்டுமொத்த விருதுகள் மற்றும், 53 பிரிவு சார் விருதுகளும் ஒவ்வொரு நிதியாண்டுக்காகவும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்காக வழங்கப்பட்டிருந்தன.

'புத்துணர்வான தீர்வுகளை வழங்கும் புத்துணர்வான நாம்' எனும் தொனிப்பொருளுக்கமைய இயங்கும் இலங்கையின் ஆடை தொழிற்துறையைச் சேர்ந்த முன்னணி நிறுவனமாக Brandix திகழ்கின்றது. உலகப் புகழ் பெற்ற வர்த்தக நாமங்களுக்கு 50 வருடங்களுக்கு மேலாக ஆடை உற்பத்திகளை இந்நிறுவனம் வழங்கியுள்ளதுடன், ஒன்பது நாடுகளில் 60,000க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டுள்ளது. பிராந்தியத்தின் நிலைபேறான ஆடை உற்பத்தியாளராகத் திகழும் பயணத்தை முன்னெடுக்கும் Brandix, தனது சகல செயற்பாடுகளிலும் மற்றும் சகல பங்காளர்களிலும் மாற்றத்தை ஊக்குவிக்க எதிர்பார்க்கின்றது.

Brandix பற்றி மேலும் அறிந்து கொள்ள www.brandix.com எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும்.

Thu, 12/02/2021 - 06:00


copied Thinakaran.lk

கருத்துரையிடுக

புதியது பழையவை