கத்திக் குத்துத் தாக்குதல்: பலஸ்தீனர் சுட்டுக் கொலை

கிழக்கு ஜெரூசத்தில் இஸ்ரேலியர் ஒருவர் மீது கத்திக்குத்து நடத்தி பொலிஸாரை தாக்க முயன்ற பலஸ்தீனர் ஒருவர் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

டமஸ்கஸ் நுழைவாயிலுக்கு அருகில் ஒருவர் மீது கத்திக்குத்து நடத்திய தாக்குதல்தாரி பின்னர் எல்லை காவல் பெலிஸாரை தாக்க முயன்றார் என்று இஸ்ரேல் பொலிஸ் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

“தாக்குதல்தாரி பொலிஸாரால் செயலிழக்கச் செய்யப்பட்டார்” என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தாக்குதல்தாரியை பொலிஸார் கொன்றதாக பலஸ்தீன செம்பிறை சங்க பேச்சாளர் தெரிவித்தார்.

இதில் கத்திக்குத்துக்கு இலக்கான 20 வயது இளைஞர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் தீவிர நிலையில் இருந்து மிதமான நிலைக்கு திரும்பியதாகவும் இஸ்ரேலிய அவசர சேவை பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேற்குக் கரை நகரான சல்பித்தைச் சேர்ந்த 25 வயது ஆடவர் ஒருவரே இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதன்போது இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இஸ்ரேலிய படையினர் அங்கிருக்கும் பலஸ்தீனர்களை கலைக்க கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொண்டனர்.

Mon, 12/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை