இலங்கை – போலந்துக்கான விமான சேவை மீள ஆரம்பம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இடைநிறுத்தப்பட்டிருந்த இலங்கைக்கும் போலந்துக்குமிடையிலான நேரடி விமான சேவைகள் நேற்று புதன்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, போலந்துக்கும் இலங்கைக்குமிடையிலான நேரடி விமான சேவையை Lot Polish Airlines நேற்று முதல் ஆரம்பித்துள்ளது.

அதன்படி Lot Polish Airlines, திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நாட்டுக்கு வரவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் இலங்கைக்கான போலந்து தூதுவர் பேராசிரியர் ஆடம் பரகூஸ்கிக்குமிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே நேரடி விமான சேவையை ஆரம்பிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கைக்கான சேவைகளை நிறுத்தியிருந்த பல விமான சேவைகளும் மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 

Thu, 12/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை