இலங்கை பிரஜையின் கொலை; சர்வமத தலைவர்கள் கண்டனம்

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனைக்கும் கோரிக்கை

இலங்கை பிரஜை பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு சர்வமத தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று நாரஹேன்பிட்ட அபயராமய விகாரையில் நடைபெற்றது.

இதில் சர்வமத தலைவர்களான பெளத்த மத தலைவர்கள், கலாநிதி பாபு சர்மா குருக்கள், கலாநிதி ஹஸன் மெளலானா, மற்றும் கலாநிதி குருகுலசூரிய உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர். இதுகுறித்து பாகிஸ்தான் அரசு பூரண விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உச்சப்பட்ட தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என குருமார்கள் கலந்துகொண்டு இந்நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் பாகிஸ்தான் அரசாங்கம் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

ஏ.எஸ்.எம்.ஜாவித்

 

Mon, 12/06/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை