ஒமிக்ரோன்: தடுப்பூசிகளின் செயல்திறன் பற்றி கவலை

ஒமிக்ரோன் திரிபுக்கு எதிராக செயற்படுவதில் தற்போதுள்ள கொவிட்–19 தடுப்பூசிகள் நெருக்கடியை சந்தித்திருப்பதாகவும் செயல்திறன் கொண்ட புதிய தடுப்பூசியை பெற மாதங்கள் எடுத்துக்கொள்ளக் கூடும் என்றும் அமெரிக்க மருந்து உற்பத்தி நிறுவனமான மொடர்னாவின் தலைவர் ஸ்டீபன் பேன்சல் தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் திரிபுக்கு எதிராக தற்போதிருக்கும் தடுப்பூசிகளின் செயல்திறன் தரவு அடுத்த இரண்டு வாரங்களில் கிடைக்கும் என்றபோதும் விஞ்ஞானிகள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்று பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

“இது நன்றாக இருக்காது, என்றே நான் பேசிய அனைத்து விஞ்ஞானிகளும் கூறுகிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.

ஒமிக்ரோன் திரிபில் அச்சுறுத்தல் மிக அதிகமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே எச்சரித்துள்ளது. ஒமிக்ரோன் பிறழ்வில் காணப்படும் 50 பிறழ்வுகளில் 32 ஸ்பைக் புரதத்தில் இருப்பதால் ஆராய்ச்சியாளர்கள் கவலைப்படுவதாக பேன்சல்் கூறினார், இது கொவிட்டுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தடுப்பூசிகள் பயன்படுத்தும் வைரஸின் ஒரு பகுதியாகும்.

ஒமிக்ரோன் திரிபுக்கு எதிரான தடுப்பூசிக்கு பணிகளை ஆரம்பித்திருப்பதாக பைசஸ் மற்றும் மொடர்னா நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த புதிய திரிபு அவதானத்திற்கு உரியதே ஒழிய அச்சப்படுவதற்குரியதல்ல என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Wed, 12/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை