மஞ்சு லலித் வர்ணகுமார எம்.பியாக பதவிப்பிரமாணம்

மஞ்சு லலித் வர்ணகுமார எம்.பியாக பதவிப்பிரமாணம்-Manju Lalith Warnakumara Sworn in as SLPP Kalutara District MP-Vacancy Created by Mahinda Samarshinghe

மஹிந்த சமரசிங்கவின் இராஜினாமா காரணமாக வெற்றிடமான களுத்துறை மாவட்ட ஶ்ரீ.ல.பொ.பெரமுன (SLPP) கட்சி எம்.பியாக மஞ்சு லலித் வர்ணகுமார பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இன்று காலை (01) பிரதி சபாநாயகர் தலைமையில் அவை நடவடிக்கை ஆரம்பமானதைத் தொடர்ந்து, பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டி முன்னிலையில் மஞ்சு லலித் வர்ணகுமார பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

மஞ்சு லலித் வர்ணகுமார எம்.பியாக பதவிப்பிரமாணம்-Manju Lalith Warnakumara Sworn in as SLPP Kalutara District MP-Vacancy Created by Mahinda Samarshinghe

குறித்த இடத்திற்கு அவரை நியமிப்பது தொடர்பான அதி விசேட வர்த்தமானி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நேற்றையதினம் (30) வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Wed, 12/01/2021 - 09:52

from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை