சுவீடனின் முதலாவது பெண் பிரதமர் மீண்டும் பதவியேற்பு

சுவீடன் நாட்டின் முதல் பெண் பிரதமர் அரசியல் குழப்பம் காரணமாக பதவி ஏற்று சில மணி நேரத்தில் பதவி விலகிய நிலையில் மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற புதிய வாக்கெடுப்பில் சமூக ஜனநாயகக் கட்சித் தலைவியான மக்டலேனா அன்டர்சனுக்கு குறுகிய வாக்கு வித்தியாசத்தில் ஆதரவு கிடைத்தது.

அடுத்த ஆண்டு செப்டெம்பர் நடைபெறவிருக்கும் தேர்தல் வரை ஒற்றை கட்சி அரசாங்கம் ஒன்றுக்கு தலைமை வகிக்க அவர் எதிர்பார்த்துள்ளார். அவரது கூட்டணி அரசு முறிந்ததை அடுத்து அவர் கடந்த புதன்கிழமை பதவி விலகினார்.

சுவீடன் அரசியல் முறையின்படி பிரதமரை நியமிப்பதற்கு வேட்பாளர் ஒருவர் தமக்கு எதிரான பெரும்பான்மை வாக்குகள் பதிவாவதை தவிர்த்தால் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் ஏனைய கட்சிகளின் ஆதரவு கிடைக்காவிட்டால், பாராளுமன்றத்தில் அவர் சட்டங்களை நிறைவேற்றுவதற்கு நெருக்கடி ஏற்படும். 349 ஆசனங்கள் கொண்ட பாராளுமன்றத்தில் மைய இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சி 100 இடங்களையே பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 12/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை