இஸ்ரேலில் 4ஆவது முறை தடுப்பூசி வழங்கத் திட்டம்

ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு தாக்கத்தை எதிர்கொண்டுள்ள இஸ்ரேல் உலகின் முதல் நாடாக நான்காவது முறை தடுப்பூசி வழங்க திட்டமிட்டுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு நான்காவது பூஸ்டர் தடுப்பூசியை வழங்குவதற்கு இஸ்ரேலிய தொற்றுநோயியல் நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இந்தத் திட்டத்தை வரவேற்றிருக்கும் பிரதமர் நெப்டாரி பென்னட், இதற்கு தயாராகும்படி அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார். இஸ்ரேலில் ஒமிக்ரோன் திரிபுடனான முதல் நோயாளி கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த வைரஸ் திரிபுடனான குறைந்தது 340 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நான்காவது முறை தடுப்பூசி வழங்கும் இந்தத் திட்டம் சுகாதார அதிகாரிகளின் அனுமதிக்காக காத்திருந்தபோதும், மூன்றாவது முறை தடுப்பூசி பெற்று குறைந்தது நான்கு மாதங்கள் கடந்தவர்களுக்கு இந்த டோஸ் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Thu, 12/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை