புர்கினா பாசோ: ஆயுததாரிகளின் தாக்குதலில் 41 பேர் உயிரிழப்பு

புர்கினா பாசோவின் பதற்றம் கொண்ட வடக்கு பகுதியில் ஆயுதக் குழுக்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றதாக அரசு அறிவித்துள்ளது.

இதில் அரச ஆதரவு சிவில் பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டதாக அரசு குறிப்பிட்டுள்ளது.

மாலி எல்லைக்கு அருகில் இருக்கும் நகருக்கு அருகே வர்த்தகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்ட சிவில் பாதுகாப்பு படையினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாலி, புர்கினா பாசோ மற்றும் நைகர் நாடுகளில் விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு சமூகங்களிடையே இந்த ஆயுதக் குழுக்கள் சமய மற்றும் இனப் பதற்றங்களை ஏற்படுத்தி உள்ளன. பாகுபடுத்தப்பட்ட சமூகங்களிடையே இந்த ஆயுதக் குழுக்களுக்கான ஆட்சேர்ப்பு அதிகரித்துள்ளது.

குறிப்பாக புர்கினா பாசோவின் பலவீனமான இராணுவம் இந்த வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு போராடி வருகிறது.

கடந்த நவம்பர் நடுப்பகுதியில் சோதனைச்சாவடி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 57 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tue, 12/28/2021 - 08:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை