வன்னி மாவட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்புக்காக ரூ. 400 மில்லியன் ஒதுக்கீடு

வன்னி மாவட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்புக்காக ரூ. 400 மில்லியன் ஒதுக்கீடு-Rs 400 million Allocated for Vanni District Housing and Infrastructure-Kader Masthan

- காதர் மஸ்தான் எம்.பி தெரிவிப்பு

வன்னி மாவட்டத்தின் வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கே. காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

எமது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் எமது பகுதிக்குரிய தேவைப்படுகளை செய்து தருவதற்கு தயாராக இருக்கின்றார்கள். துறை சார்ந்த அமைச்சர்களும் அதனை செய்து தர தயாராக இருக்கின்றார்கள். கல்வி தகமை குறைந்தவர்களுக்கான ஒரு இலட்சம் வேலை வாயப்பில் இரண்டு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதால் 600 வீதம் இருவருக்கும் தரப்பட்டுள்ளது. உட்கட்டடைப்பு வேலைகளுக்கும், வீடுகளுக்கும் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரருத்த அவர்களுடன் பேசி வன்னி மாவட்டத்திற்கு 400 மில்லியன் ஒதுக்கி வீடமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகள், நனோ குடிநீர்வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

வன்னி மாவட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்புக்காக ரூ. 400 மில்லியன் ஒதுக்கீடு-Rs 400 million Allocated for Vanni District Housing and Infrastructure-Kader Masthan

என்னால் வவுனியாவிற்கு 40 மில்லியன் ரூபாயும், மன்னாருக்கு 120 மில்லியன் ரூபாயும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 150 மில்லியன் ரூபாயும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் 20 நானோ குடிநீர்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரால் 23 நானோ குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மூன்று மாவட்டங்களிலும் கிராமிய உட்கட்டமைப்பு அமைச்சரால் உளளக வீதி அபிவிருத்திக்காக 150 கிலோ மீற்றர் காபெற் வீதிகளுக்கான வேலைகள் நடைபெறுகின்றது. இவ்வாறு பல வேலைகள் நடைபெறுகின்ற போதும் ஒன்றும் நடக்கவில்லை என பலர் குற்றம் சாட்டுகிறார்கள். 5000 குளம் புனரமைப்பு திட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குளங்கள் 3 மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

வன்னி மாவட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்புக்காக ரூ. 400 மில்லியன் ஒதுக்கீடு-Rs 400 million Allocated for Vanni District Housing and Infrastructure-Kader Masthan

வேலைத்திட்டங்களில் சில இடங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அது தவறான கருத்து. நான் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக இல்லாவிட்டாலும் 40 மில்லியன் ரூபாயை உட்கட்டமைப்புக்காக ஒதுக்கியுள்ளேன். நான் வவுனியாவிற்கும் பல அபிவிருத்திட்டங்களை உள்வாங்கியுள்ளேன். நான் பாகுபாடாக செயற்படவில்லை.

அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலிலும்  வெற்றி பெறுவோம். பல கூட்டு கட்சிகள் சேர்ந்த எமது அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இருக்கின்றோம். அவ்வப்போது சில சில பிரச்சனைகள், விமர்சனங்கள் இருந்தாலும் நாம் அதனை தீர்த்து வரும் மாகாண சபையில் பெரும் வெற்றியைப் பெறுவோம்.

விலைவாசியைப் பொறுத்தவரை எல்லா நாட்டிலும் தற்போது பிரச்சனை தான். கோவிட் காரணமாக தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கிராமிய மட்டத்தில் அபிவிருத்திகளை அதிகரித்து மக்களது வாழ்வாதாரத்தை உயர்தக் கூடிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிராம சேவையாளர் பிரிவுக்கு 30 இலட்சம், ஒரு வட்டாரத்திற்கு 40 இலட்சம், பிரதேச ஒருங்கிணைப்பு தலைவருக்கு 100 மில்லியன், பிரதி ஒருங்குகிணைப்பு குழுத் தலைவருக்கு 20 மில்லியன் என மக்களின் வருமானத்தை ஈட்டுவதற்காக நிதி அமைச்சரால் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றால் டொலர் பிரச்சனை இருக்கிறது. அதனை ஈடுசெய்ய நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அது நிவர்த்தியாகும் எனவும் தெரிவித்தார்.

வவுனியா விசேட நிருபர்

Sun, 12/19/2021 - 11:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை