புருண்டி சிறையில் தீ: 38 பேர் உயிரிழப்பு

புருண்டி தலைநகர் கிடேகாவில் உள்ள அளவுக்கு அதிகமான கைதிகளை கொண்ட சிறையில் ஏற்பட்ட தீயில் குறைந்தது 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஏற்பட்டிருக்கும் இந்தத் தீயில் மேலும் 69 பேர் காயமடைந்திருப்பதோடு சிறைச்சாலையின் பல பகுதிகளும் சேதமடைந்துள்ளன.

எனினும் இந்தத் தீக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்த சிறையில் 400 பேர் இருப்பதற்கே வசதி இருக்கும் நிலையில் கடந்த நவம்பர் இறுதியின்போது 1,500க்கும் அதிமான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக சிறை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

மின்சார கோளாறு காரணமாக இதே சிறையில் கடந்த ஓகஸ்ட் மாதமும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

எனினும் அப்போது எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Thu, 12/09/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை