பங்களாதேஷில் படகு தீப்பிடித்து 32 பேர் பலி

பங்களாதேஷில் பயணிகள் படகு தீப்பற்றிக் கொண்டதில், குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூன்று அடுக்குகள் கொண்ட ஓபிஜான் 10 எனும்  படகு  ஆற்றின் நடுவில் சென்று கொண்டிருந்த போது  தீப்பிடித்துக் கொண்டதாக பங்களாதேஷ் பொலிஸார் தெரிவித்தனர்.

தலைநகர் டாக்காவிலிருந்து 250 கிலோமீற்றர் தெற்கில் இருக்கும் ஜக்கார்காதி எனும் ஊரின் அருகே, நேற்று அதிகாலையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. 

பலர் தீயில் கருகி மாண்டதாகவும் மேலும் சிலர்  தீயிலிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்து மூழ்கியதாகவும் கூறப்பட்டது.

உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்னும் உயரலாம் என்று அந்த வட்டாரத்தின் பொலிஸ் தலைவர் மொய்னுல் இஸ்லாம் தெரிவித்தார். எஞ்சின் அறையில் இருந்தே தீ பிடித்திருப்பதாக குறிப்பிட்டிருக்கும் இஸ்லாம், டாக்காவில் இருந்து வீடு திரும்புபவர்கள் அந்த படகு முழுவதும் தீ பரவி இருப்பதாக தெரிவித்தனர்.

“தீக்காயங்களுடன் 100க்கும் அதிகமானவர்களை பரிசாலில் உள்ள மருத்துவமனைகளுக்கு நாம் அனுப்பிவைத்தோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Sat, 12/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை