மியன்மார் இராணுவ தாக்குதல்; 30 இற்கும் அதிகமானோர் பலி

மியன்மாரில் இராணுவத்தின் மீது குற்றம்சாட்டப்படும் தாக்குதல் ஒன்றை அடுத்து 30க்கும் அதிகமான உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் தமது இரு ஊழியர்கள் காணாமல் போயிருப்பதாக சிறுவர்களை பாதுகாப்போம் என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு கயா மாநிலத்தில் துருப்பினர், கார் வண்டிகளில் இருந்து மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி சிலரை கைது செய்தும் மற்றும் சிலரை கொன்று அவர்களின் உடல்களை தீயிட்டும் இருப்பதாக அந்தத் தொண்டு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருக்கும் இந்த சம்பவத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்களும் கொல்லப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

அந்தப் பகுதியில் ஆயுதம் ஏந்திய பல பயங்கரவாதிகளை கொன்றதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த பெப்ரவரியில் இராணுவம் நாட்டில் ஆட்சியை கைப்பற்றியது தொடக்கம் மியன்மார் எங்கும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் சிறுவர்களை பாதுகாப்போம் அமைப்பு கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் இந்தத் தாக்குதலுக்கு கண்டனத்தை வெளியிட்டது. இதில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Mon, 12/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை